உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சுதந்திர தின விழா முன்னேற்பாடு கலெக்டர் தலைமையில் ஆலோசனை

சுதந்திர தின விழா முன்னேற்பாடு கலெக்டர் தலைமையில் ஆலோசனை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி., ரஜத்சதுர்வேதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாப்படுகிறது.விழாவில் காவல் துறை மூலம் அணிவகுப்புகள், கொடிக்கம்பம் தயார் செய்யும் பணிகள், பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற் கொள்ள வேண்டும். நகரின் முக்கிய அரசு கட்டடங்களில் மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும். விழா மேடை தயார் செய்ய வேண்டும். தீயணைப்பு முன்னேற்பாடு களை மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லுாரி மாண வர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண் டும் என அரசு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை