உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 7 பேருக்கு தொடர் சிகிச்சை

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 7 பேருக்கு தொடர் சிகிச்சை

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களில், 7 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி மற்றும் சேஷசமுத்திரம் பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேருக்கு கண்பார்வை குறைவு, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டது. உடன் அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில், அதிகளவு பாதிப்புக்குள்ளாகிய 84 பேர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம், ராயப்பேட்டை மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் பரிந்துரை செய்யப்பட்டனர்.மீதமுள்ள 145 பேருக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், இதுவரை 65 பேர் இறந்தனர். நேற்று வரை 153 பேர் குணமடைந்துள்ளனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 4 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 3 பேர் என மொத்தமாக 7 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை