உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பஞ்சு வரத்து குறைந்ததால் பருத்தி வார சந்தை ரத்து

பஞ்சு வரத்து குறைந்ததால் பருத்தி வார சந்தை ரத்து

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தைக்கு பஞ்சு மூட்டைகள் வரத்து குறைந்ததால் நேற்றைய வர்த்தகம் ரத்து செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் பருத்தி வார சந்தை நடைபெறும். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.நேற்று சந்தைக்கு பஞ்சு மூட்டைகளின் வரத்து இல்லாமல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் நேற்றைய பருத்தி வார சந்தையில் வர்த்தகம் ரத்து செய்யப்பட்டது என பருத்தி சந்தை செயல் ஆட்சியர் செந்தில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ