உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தீ விபத்தில் கரும்பு பயிர் சேதம்

தீ விபத்தில் கரும்பு பயிர் சேதம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் கருகி சேதமானது.சங்கராபுரம் அடுத்த திம்மநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். விவசாயி. இவரது கரும்பு தோட்டத்தில் நேற்று திடிரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் ஒரு எக்கர் கரும்பு பயிர் தீயில் கருகி சேதமடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ