உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் கடத்தல் தாய் புகார்

மகள் கடத்தல் தாய் புகார்

கள்ளக்குறிச்சி : மரவானத்தம் கிராமத்தில் மகள் கடத்தப்பட்டதாக தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.சின்னசேலம் அடுத்த மரவானத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மகள் மேனகாதேவி, 17; தனியார் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 18ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் பரிமளா, பெருமங்கலத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் அஜித்குமார் என்பவர் மகளைக் கடத்திச் சென்றதாக அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி