உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க முடிவு

ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க முடிவு

கள்ளக்குறிச்சி: இந்திலியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், நுாறு நாள் வேலை வழங்கா விட்டால், ஆதார், ரேஷன் கார்டு, அடையாள அட்டைகளை ஒப்படைக்கப் போவதாக மாற்றுத் திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமை சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், இந்திலி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அளித்த மனு: கை, கால் ஊனமுற்ற, கண் பார்வையற்ற, காது கேளாத மாற்றுத் திறனாளிகள் வெளியில் வேலைக்கு செல்வது கடினமானது. எனவே, அரசு உதவித் தொகையினை வைத்தும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நுாறு நாள் வேலை மூலமாக கிடைக்கும் ஊதியம் மூலமும் வாழ்ந்து வருகிறோம்.இந்திலி ஊராட்சியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 4 மாதங்களாக நுாறு நாள் வேலை வழங்கப்படவில்லை. இதனால் வருமானமின்றி தவித்து வருகிறோம்.எங்களுக்கு நுாறு நாள் வேலை வழங்க வேண்டும். இல்லாத பட்சத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை வரும் 22ம் தேதி ஒப்படைக்க உள்ளோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை