உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தியாகதுருகம்: தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.மதிய உணவு இடைவேளையின் போது அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் தயாபரன் தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ.,க்கள் தினகரன்பாபு, முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ஊராட்சி செயலாளர் மீது தற்போதய மாவட்ட ஊராட்சி செயலாளர் பொய் புகார் அளித்து கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதை கண்டித்து பி.டி.ஓ., க்கள் துரைமுருகன், ஜெகன்நாதன் பேசினர்.உதவி பொறியாளர் ராமர், துணை பி.டி.ஓ.,க்கள் ஜெயசுதா, மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார தலைவர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை