| ADDED : ஜூலை 02, 2024 11:12 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மோகன்குமார், மகளிரணி அமைப்பாளர்கள் செல்வி, விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ரங்கசாமி வரவேற்றார். பி.டி.ஓ., செந்தில்முருகன், ஜெகநாதன் வாழ்த்திப் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும். மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் 500 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.மாவட்ட துணைத்தலைவர் தயாபரன், இணைச் செயலாளர்கள் முத்துசாமி, மணி, முத்தமிழ்ச்செல்வன், பிரபாகரன், பி.டி.ஓ., நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.