உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சொத்தை மீட்டு தரக்கோரி மாற்றுத்திறனாளி தர்ணா

சொத்தை மீட்டு தரக்கோரி மாற்றுத்திறனாளி தர்ணா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், ஆக்கிரமிப்பில் உள்ள சொத்தினை மீட்டுத்தரக்கோரி பார்வையற்ற மாற்றுத் திறனாளி தர்ணாவில் ஈடுபட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், பாவந்துாரைச் சேர்ந்த சேவி மகன் ராஜமாணிக்கம், 53; பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர், நேற்று மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர் திடீரென அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார், அவரிடம் மனு அளிக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.அவர் அளித்த மனு:எனக்கு சொந்தமாக பாவந்துார் கிராம எல்லையில் 17 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக எங்கள் பகுதியை சேர்ந்த 8 பேருக்கும் பிரச்னை உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அந்த இடத்தில் 8 பேரும் அத்துமீறி நுழைந்து கொட்டகை அமைத்து ஆக்கிரமித்து, போலியாக பட்டா பெற்றுள்ளனர். இது குறித்து கேட்ட என்னை திட்டி, மிரட்டுகின்றனர். எனவே உரிய விசாரணை நடத்தி, சொத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி