உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராயம் குடித்து சாவு? உடல் தோண்டி எடுத்து பரிசோதனை

கள்ளச்சாராயம் குடித்து சாவு? உடல் தோண்டி எடுத்து பரிசோதனை

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கள்ளச்சராயம் குடித்து இறந்ததாக கலெக்டரிடம் அளித்த புகாரின் பேரில், இறந்தவர் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்,57; கடந்த 20ம் தேதி திடீரென மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் கண்ணன் உடலை சேஷசமுத்திரம் சுடுகாட்டில் புதைத்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் தற்போது வரை 65 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு தலா ரூ.10 லட்சம் அறிவித்து வழங்கியது.இந்நிலையல், கள்ளச்சாராயம் குடித்ததால்தான் கண்ணன் இறந்தார் என அவரது மனைவி வெள்ளையம்மாள் கடந்த 23ம் தேதி கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து சேஷசமுத்திரம் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட கண்ணன் உடலை நேற்று சங்கராபுரம் (பொறுப்பு) தாசில்தார் பன்னீர்செல்வம் முன்னிலையில் தோண்டி எடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி தலைமை மருத்துவர் வீரவிஜயராகவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்..பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை பெறப்பட்டு அவர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தார் என தெரிய வந்தால் தமிழக அரசுக்கு அனுப்பி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ