உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குறைகேட்புக் கூட்டத்தில் அதிகாரிகள் எஸ்கேப் மனுக்களுடன் காத்திருந்த பொதுமக்கள் அதிருப்தி

குறைகேட்புக் கூட்டத்தில் அதிகாரிகள் எஸ்கேப் மனுக்களுடன் காத்திருந்த பொதுமக்கள் அதிருப்தி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், அதிகாரிகள் மனுக்களை பெறாமல் பாதியிலேயே சென்றதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். வருவாய்த் துறை சார்ந்த பிரச்னைகள், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, மகளிர் உரிமைத் தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை உட்பட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர்.இதில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் என 567 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு டி.ஆர்.ஓ., அறிவுறுத்தினார்.குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமானோர் வந்திருந்தனர். அனைவரது மனுக்களையும் பெறாமல், அலுவலர்கள் சென்று விட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து மனு அளிக்க வந்தவர்கள் கூறுகையில், 'எங்களது பிரச்னை, கோரிக்கை தொடர்பாக பல முறை மனு அளித்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மாவட்ட அலுவலரிடம் நேரடியாக மனு அளித்து குறைகளை தெரிவிக்க வந்தோம். ஆனால், எங்களது மனுக்களை வாங்காமல் அதிகாரிகள் சென்று விட்டனர்.கண் துடைப்புக்காக மனுவை வாங்கி கம்ப்யூட்டரில் பதிவேற்றி, அதற்கான ஒப்புகை ரசீதை தருகின்றனர். அடுத்த வாரத்தில் இருந்து அனைவரது மனுக்களையும் அதிகாரிகள் பெற்று, குறைகளை கேட்டறிய வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை