| ADDED : மே 03, 2024 10:20 PM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் விநாயகம், பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் சென்றது. அதன்படி, கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின்படி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தீபிகா, பெண் ஊழியர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தி, அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பித்தார்.முதல்கட்ட விசாரணையில், புகார் தொடர்பான முகாந்திரம் உள்ளதை அடுத்து, விநாயகத்தை, 30ம் தேதி பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார். முழுமையான விசாரணை முடிந்ததும், விநாயகம் மீது துறை ரீதியான மற்றும் போலீஸ் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.