உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், பள்ளி செயலாளர் கோவிந்தராஜி, தாளாளர் குமார் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைவர் மணிவண்ணன் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி பேசுகையில், 'மாணவர்களின் அறிவாற்றலையும், சிந்தனை திறனையும் அதிகரிக்கும் வகையில் பட்டம் நாளிதழ் உள்ளது. போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளும் இதில் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக, மாணவ பருவத்தினரின் மனநிலையை நன்கு அறிந்து, அதற்கேற்றவாறு பட்டம் நாளிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது' என்றார்.பள்ளி தாளாளர் திருஞானசம்மந்தம், கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தரம், பள்ளி முதல்வர் தனலட்சுமி, துணை முதல்வர் ஜீசஸ்சுஜி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை