உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நகராட்சி குப்பைகள் ஆற்றங்கரையில் கொட்டும் அவலம்

நகராட்சி குப்பைகள் ஆற்றங்கரையில் கொட்டும் அவலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கோமுகி ஆற்றங்கரையில் கொட்டி சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி நகராட்சி 21 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், தரம் பிரித்து மக்கும் குப்பைகள் மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி வளாகத்திலும், மயான வளாகத்திலும் இதற்கான இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை மயானத்தின் அருகில் கோமுகி ஆற்றங்கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது கோமுகி ஆற்றில் வெள்ளம் வரும் காலத்தில் இந்த குப்பைகள் கலந்து காதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தி, மாற்று இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை