உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நகரத்தார் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு 

நகரத்தார் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு 

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் நகரத்தார் சங்க கூட்டம் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி கண்ணன் மகாலில் நடந்த சிறப்புக் கூட்டத்திற்கு சங்கராபுரம் அருணாசலம் தலைமை தாங்கினார். வணிகர் பேரவை மாவட்டப் பொருளர் முத்துக்கருப்பன் முன்னிலை வகித்தார். திரையரங்க உரிமையாளர் சிவலிங்கம் வரவேற்றார்.கூட்டத்தில் நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தலைவர் சங்கராபுரம் முத்துக்கருப்பன், செயலாளர் கள்ளக்குறிச்சி அருண், பொருளாளர் சின்னசேலம் அருணாசலம், துணைத்தலைர் கள்ளக்குறிச்சி ஆண்டியப்பன் துணை செயலாளர் சங்கராபுரம் நாச்சியப்பன், செயற்குழு உறுப்பினர்களாக சிவலிங்கம், சங்கர், கண்ணன், சுப்ரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் சங்கத்தின் துவக்க விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். செயலர் அருண் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ