மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
12 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
12 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
15 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
16 hour(s) ago
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேரின் நீதிமன்ற காவல் வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 65 பேர் இறந்தனர். வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜ் (எ) கண்ணுக்குட்டி, இவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உட்பட 21 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய நபர்களாக கருதப்படும் 11 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, விசாரணை செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.கைதான 21 பேர்களில் தெய்வீகன், அரிமுத்து மற்றும் அய்யாசாமி ஆகியோரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது.இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் 3 பேரையும் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜர்படுத்தினர். மூன்று பேரின் நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.
12 hour(s) ago
12 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago