உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகனை கொன்ற தந்தை கைது சங்கராபுரம் அருகே பரபரப்பு

மகனை கொன்ற தந்தை கைது சங்கராபுரம் அருகே பரபரப்பு

சங்கராபுரம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் காட்டுகொட்டாயைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுரேஷ், 33; ஆட்டோ டிரைவர். இவருக்கு வேதேஸ்வரி என்ற மனைவியும் மகனும், மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக வேதேஸ்வரி குழந்தைகளுடன் தாய் வீடான கடுவனுாரில் வசிக்கிறார்.எஸ்.வி.பாளையத்தில் தன் பாட்டி பொன்னம்மாள், தந்தை சுப்ரமணியனுடன் வசித்து வந்த சுரேஷ், கடந்த 3ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வேதேஸ்வரி அளித்த புகாரின்படி, சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனையில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சுரேஷ் இறந்தது தெரிய வந்தது.போலீசார் சுப்ரமணியனை விசாரித்தபோது, கடந்த 3ம் தேதி மது போதையில் வீட்டிற்கு வந்த சுரேஷ், பாட்டி பொன்னம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்து, அவர் அணிந்திருந்த தோடை அறுத்தார். இதனால், ஆத்திரமடைந்து சுரேஷை தள்ளி விட்டதில், கீழே இருந்த கருங்கல் மீது விழுந்து தலையில் பலத்த காயமடைந்து இறந்ததாக ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, போலீசார், சுப்ரமணியனை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ