உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தீயணைப்பு வாகனம் துவக்க விழா

தீயணைப்பு வாகனம் துவக்க விழா

தியாகதுருகம் : தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்தில் புதிய தீயணைப்பு வாகனம் துவக்க விழா நடந்தது.தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு நவீன கருவிகள் பொருத்தப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தீயணைப்பு வாகனத்தை அரசு வழங்கியுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மலையரசன் எம்.பி., மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் இருசம்மாள், உதவி மாவட்ட அலுவலர். செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.நிலைய அலுவலர் நாகேஸ்வரன், நிலைய அலுவலர்கள் (பொ) ராஜா, கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ