உள்ளூர் செய்திகள்

ஐம்பெரும் விழா

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் திருவள்ளுவர் அறக்கட்டளை மற்றும் தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு, திருவள்ளுவர் அறக்கட்டளை நிறுவனர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ஊராட்சி தலைவர் பரமசிவம், துணை தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் துரைமுருகன் தொடக்க உரையாற்றினார்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விஜயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை