உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்னாள் ஊராட்சித் தலைவி கார் மோதி பலி

முன்னாள் ஊராட்சித் தலைவி கார் மோதி பலி

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைபட்டு அருகே உள்ள மைக்கேல்புரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி மீது கார் மோதிய விபத்தில் அவர் இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரத்தைச் சேர்ந்த சூசைநாதன் மனைவி ஜெஸ்பீனாமேரி,55; முன்னாள் ஊராட்சித் தலைவர். இவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து நிலத்திற்கு மூங்கில்துறைப்பட்டு செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஜெஸ்பீனாமேரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில் வடப்பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை