உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பொது வாய்மொழித் தேர்வு

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பொது வாய்மொழித் தேர்வு

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வணிகவியல் துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான பொது வாய்மொழித்தேர்வு நடந்தது.கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். முதல்வர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார். வணிகவியல் துறைத் தலைவர் அருள், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.பொதுவாய்மொழி ஆய்வு தேர்வுக்கான புற தேர்வாளராக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வணிகவியல் துறை பேராசிரியர், யு.ஜி.சி., ஆராய்ச்சி விருதாளர் ராமு வாய்மொழி தேர்வினை நடத்தினார்.வணிகவியல் துறை உதவி பேராசிரியர் அனந்தராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை