உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட பேரவை கூட்டம்

அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட பேரவை கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட பேரவைக் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி டேனிஷ் மிஷன் தொடக்கப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, வட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் மோகன் சிறப்புரையாற்றினார். வட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். செயலாளர் சடகோபன், பொருளாளர் கோவிந்தராசன், இணைச் செயலாளர் மரியமிக்கேல் அஞ்சலி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் ராஜூ, மாவட்ட துணைத்தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும். முழு மருத்துவ செலவையும் காப்பீடு திட்டம் மூலம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி