| ADDED : ஆக 21, 2024 07:15 AM
உளுந்துார்பேட்டை : உளுநதுார்பேட்டை அருகே பஸ் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். திருச்சியைச் சேர்ந்தவர் ஜெயம், 44; அரசு பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் பஸ்சை ஓட்டிச் சென்றார்.நேற்று அதிகாலை 3:00 மணியளவில் உளுந்துார்பேட்டையில் விருத்தாசலம் சாலை மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சென்னை கே.கே.. நகர் போஸ் மனைவி முத்துலட்சுமி, 46; பெரம்பலுார் மாவட்டம், கீழ்பெரம்பலுார் கருப்பன் மகன் ராஜா, 18; டிரைவர் ஜெயம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.காயமடைந்தவர்கள் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற உளுந்துார்பேட்டை போலீசார், மற்ற பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.