உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் வீரபத்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு அரசு ஆதிதிரவிடர் நல விடுதிகள் காப்பாளர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன், அனைத்து அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் காமராஜ் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் நடத்தப்படும் ஆய்வு கூட்டங்களை தவிர்க்க வேண்டும். காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ