| ADDED : ஏப் 17, 2024 11:30 PM
கள்ளக்குறிச்சி தொகுதியை சேர்ந்த வெளியூரில் உள்ள வாக்காளர்களுக்கு ஓட்டு போட 'ஜி.பே' மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறது. தி.மு.க., ரூ.400 , அ.தி.மு.க., ரூ 300 கொடுத்து வருகின்றனர். இரு தரப்பினரும் 80 சதவீத வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். வெளியூரில் உள்ள வாக்காளர்களை தேர்தல் அன்று அழைத்து வருவதற்கு வாகன வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர். ஓட்டுக்கு பணம் மற்றும் சொந்த ஊர் வந்து செல்வதற்கான பயண செலவு உள்ளிட்ட மொத்த தொகையை 'ஜி.பே' மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.ஓட்டுக்கு பணம் கொடுப்பதிலும் டெக்னாலஜியை பயன்படுத்தி அரசியல் கட்சியினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.-நமது நிருபர்-