உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பட்டதாரி வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

பட்டதாரி வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

ரிஷிவந்தியம்:பல்லவாடி கிராமத்தில் வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சிவா, 21; பி.ஏ., பட்டதாரி. கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடும்பத்துடன் பெங்களூரு சென்றவர் அங்கு, அவரது அண்ணன் செல்வத்துடன் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.கல்லுாரியில் மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்காக சில தினங்களுக்கு முன் பல்லவாடிக்கு வந்தவர் மீண்டும் பெங்களூரு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இந்நிலையில், செல்வம் பல முறை போன் செய்தும் சிவா போனை எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த செல்வம், நேற்று முன்தினம் 13ம் தேதி அருகில் உள்ள உறவினர் குடும்பத்திற்கு போன் செய்து, வீட்டில் சிவா இருக்கிறாரா என பார்க்குமாறு செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது உறவினர்கள் சென்று பார்த்த போது, சிவா மின்விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து சிவா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை