உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நுாறு நாள் திட்டப் பணி பி.டி.ஓ., ஆய்வு

நுாறு நாள் திட்டப் பணி பி.டி.ஓ., ஆய்வு

சின்னசேலம் : சின்னசேலம் ஒன்றியம், கனியாமூர், பெத்தானுார் ஆகிய ஊராட்சிகளில் பி.டி.ஓ., 100 நாள் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.கனியாமூர், பெத்தானுார் ஊராட்சிகளில் 100 நாள் திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை பி.டி.ஓ., செந்தில் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளின் தரம் குறித்தும் 100 நாள் திட்டத்தில் பணிக்கு வருவோரின் எண்ணிக்கை மற்றும் பணி நேரம், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார்.தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடத்தில் அறிவுறுத்தினார். ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்