உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் கன மழை; 3 வீடுகள் இடிந்து சேதம்

சங்கராபுரத்தில் கன மழை; 3 வீடுகள் இடிந்து சேதம்

சங்கராபரம்: சங்கராபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.சங்கராபுரம் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதில், சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரது கூரை வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. கொசப்பாடியை சேர்ந்த பச்சமுத்து மனைவி சித்ரா என்பவரது கூரை வீட்டின் ஒரு பக்க சுவர், பூட்டை கிராமத்தை சேர்ந்த சேகர் மனைவி செல்வி என்பவரது ஓட்டு விட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. சேதமடைந்த வீடுகளை வி.ஏ.ஓ.,கள் பார்வையிட்டு, விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை