உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நான் முதல்வன் திட்டத்தின் உயர் கல்வி மேளா

நான் முதல்வன் திட்டத்தின் உயர் கல்வி மேளா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி தனியார் கல்லுாரியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி மேளா நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் அனைத்து கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் உயர்கல்வி படிப்பை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தொடர்புடைய கல்லுாரிகளில் சேர்க்கை அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மூலம் உயர்கல்வி பயில உதவும் கல்விக்கடன் வசதி, மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள் போன்றவை குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விளக்கப்பட்டது.முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா மற்றும் அனைத்து கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை