கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 23 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்கள் பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது. இதில். மாணவர் எண் ணிக்கை அடிப்படையில் நுாறு சதவீத தேர்ச்சியுடன் முதல் 10 இடங்களை பிடித்த பள்ளிகள் விபரம்:உளுந்துார்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி மாவட்ட மாதிரி பள்ளி, உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா வித்யாலயா பள்ளி, சின்னசேலம் பாரதி பாலமந்திர் பள்ளி, வெள்ளையூர் அரசு மேல்நிலைப் பள்ளி.உளுந்துார்பேட்டை எஸ்.ஆர்.கே.வி., குருகுல பள்ளி, . கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எறையூர் புனித அன்னாள் மகளிர் பள்ளி, திருநாவலுார் ஈஷா வித்யா பள்ளி, திருக்கோவிலுார் ஸ்ரீஞானானந்தா பள்ளி ஆகிய பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதத்தை எட்டியுள்ளது. விழுப்புரம் மாவட்டம்
குயிலாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, விழுப்புரம் ஜான் டூயி மெட்ரிக் பள்ளி, விழுப்புரம் சேக்ரட் ஹார்ட் பள்ளி, திண்டிவனம் மவுன்ட்போர்டு பள்ளி, விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளி.கம்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளி, அவலுார்பேட்டை அரசு மகளிர் பள்ளி, விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.