உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் கைது

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்த கணவரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் கிருஷ்ணன் 40. கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி, 31. இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லாத காரணத்தால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் கலைச்செல்வி தனது தாய் வீடான பூட்டை கிராமத்திற்கு சென்றிருந்தார். அங்கு குடிபோதையில் சென்ற கிருஷ்ணன் கலைச்செல்வியிடம் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த கிருஷ்ணன் கலைச்செல்வியின் கழுத்தில் கத்தியால் கிழித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கலைச்செல்வியை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து கிருஷ்ணனை கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையிலடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ