உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் மேற்கு ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் தீவிர பிரசாரம்

சங்கராபுரம் மேற்கு ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் தீவிர பிரசாரம்

சங்கராபுரம் : சங்கராபுரம் மேற்கு ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு நேற்று சங்கராபுரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் திறந்து வேனில் சென்று தீவிரமாக ஓட்டு சேகரித்தார். இதில் அரசம்பட்டு, செல்லம்பட்டு, கொசப்பாடி, பூட்டை, செம்பரமாம்பட்டு, பொய்குணம், நெடுமானுார், சேஷசமுத்திரம், சோழம்பட்டு உட்பட பல்வேறு கிராம மக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது, பெண்கள் பலர் மலர்துாவி, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் செய்த பணிகளை நினைவுபடுத்தி ஓட்டு சேகரித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், தொகுதி பொறுப்பாளர் பிரபு, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனுவாசன், பாறை செயலாளர் வினோத். அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு. மாவட்ட விவசாய அணி செயலாளர் சன்னியாசி, ஒன்றிய இணை செயலாளர் பூபதி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஹரிகோவிந்தன், பெரமன், நிர்வாகிகள் செல்வம், வெங்கடேசன், கார்த்திகேயன், செந்தில்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை