உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மூங்கில்துறைப்பட்டில் கலெக்டர் ஆய்வு

மூங்கில்துறைப்பட்டில் கலெக்டர் ஆய்வு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை நான்கு வழிச் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மூங்கில்துறைப்பட்டில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது.இந்த பணியை நேற்று, கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிகாரியிடம் சாலை விரிவாக்கப் பணி மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.பின், மூங்கில்துறைப்பட்டிலிருந்து ஈருடையாம்பட்டு செல்லும் கிராமபுற சாலையை ஆய்வு செய்தார்.ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சிவசுப்ரமணியம், சர்மா, தாசில்தார் குமரன், மண்டல துணை தாசில்தார் லலிதா, ஊராட்சி தலைவர் பரமசிவம், சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா, கிராம நிர்வாக அலுவலர் முருகன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ