உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி : முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் 25 ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்திட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், முதல்வர் கோப்பை போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் செப்.,- அக்., மாதங்களில் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசு ஏற்பாடு, விநியோகம் போன்றவை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களிடம் ஆலோசனை செய்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. முதல்வர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க விரும்புவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in- வரும் 25ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்படும். இதில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகள் பெற இயலும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள முதல்வர் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்திடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய அளவிலான தேக்வாண்டா விளையாட்டு போட்டியில் தங்கபதக்கம் பெற்ற அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி நக்ஷத்ராவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் (பொ) நேரு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை