உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத் திறனாளிகள் வாசிக்கும் கருவி இயக்கம் குறித்த பயிற்சி

மாற்றுத் திறனாளிகள் வாசிக்கும் கருவி இயக்கம் குறித்த பயிற்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான வாசிக்கும் கருவி இயக்குவது குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பார்வை குறையுடைய 9ம் வகுப்பு முதல் மேல்நிலை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு 'டெய்சி பிளேயர்' எனப்படும் கையடக்க அதி நவீன திறன் வாசிப்பு கருவி இலவசமாக வழங்கப்பட உள்ளது.கள்ளக்குறிச்சி மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், இந்த உபகரணத்தை இயக்குவது மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பாசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமையில், முடநீக்கு வல்லுனர் பிரபாகரன் பயிற்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை