உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சொட்டு நீர் பாசனம் அமைத்து மரவள்ளி சாகுபடியில் ஆர்வம்

சொட்டு நீர் பாசனம் அமைத்து மரவள்ளி சாகுபடியில் ஆர்வம்

கள்ளகுறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் சொட்டு நீர் பாசனம் அமைத்து மரவள்ளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி பகுதியில் பருவ மழையின் துவக்கத்தில் கரும்பு, நெல், மக்காசோளம் உள்ளிட்ட நீண்ட கால பயிர்களும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையும்போது குறுகிய கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அணைகள் மற்றும் ஏரிகளின் நீர் ஆதாரத்தை கொண்டு கரும்பு மற்றும் நெல் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் இரவையிலும், மலைபிரதேசமாக உள்ள கல்வராயன்மலையில் மானாவாரியிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது.இப்பகுதியில் முள்ளுவாடி, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ் ஆகிய ரகங்களில் மரவள்ளி பயிரிடப்படுகிறது. தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உள்ளது. இதனால் பத்து மாதம் பயிரான மரவள்ளிக்கு தண்ணீர் தேவை அதிகம் என்பதாலும், வரும் காலங்களில் தண்ணீரை சேமிக்கும் வகையில் சொட்டு நீர் பாசனம் அமைத்து மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. சொட்டு நீர் பாசன முறையில் செடிகளுக்கு நேரடியாக தண்ணீர் ஊட்டம் ஏற்படும் சூழ்நிலையால் மகசூல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளது. இங்கு, உற்பத்தி செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம், ஆத்துார், தலைவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள சேகோ பேக்டரிக்கு விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர், காரனுார், குதிரைச்சந்தல், க.மாமந்துார், சடையம்பட்டு, ஏர்வாய்பட்டினம், இந்திலி, கனியாமூர், தொட்டியம், தெங்கியாநத்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் அமைத்து மரவள்ளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்