உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு சான்று மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கோவிலுார் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோரங்களில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு சான்று மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடந்தது.நகராட்சி கமிஷனர் கீதா வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தார். நகரமன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கி சாலையோர வியாபாரிகளுக்கு சான்று மற்றும் அடையாள அட்டை வழங்கினார்.நகரமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ