கள்ளக்குறிச்சி: ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மண்டல அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொடர்ந்து பெற்று வரும் சாதனையை இந்தாண்டும் தக்க வைத்துள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவி மதுஸ்ரீ 486, ஆகாஷ்வேந்தன் 484, பிரீத்திகா 482, கயிலேஷ்கிரன் 481, பிரகதிலி 481, வென்சினா 480 மதிப்பெண் பெற்றுள்ளனர்.இருவர் வெவ்வேறு பாடங்களில் சென்டம், 6 பேர் 480க்கு மேலும், 17 பேர் 470க்கு மேலும், 38 பேர் 450க்கு மேலும், 108 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் தேவஸ்த்ரி மற்றும் சாஷா தலா 490, அட்சயா 488, பிரனவி 487, ராஷ்மிஸ்ரீ மற்றும் பிரியங்கா 485 மதிப்பெண் பெற்றனர்.40 பேர் வெவ்வேறு பாடங்களில் சென்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 15 பேர் 480க்கு மேலும், 38 பேர் 470க்கு மேலும், 77 பேர் 450க்கு மேலும், 156 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் தாளாளர் மகேந்திரன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. இதில், பள்ளி செயலாளர் லட்சுமி பிரியா, நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், இணை நிர்வாக இயக்குநர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டி கவுரவித்தனர்.அப்போது, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் நான்சி மாதுளா, துணை முதல்வர் அஞ்சப்பெல்லி ச்ரவன்குமார், மெட்ரிக் பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன், பிரிவு முதல்வர்கள் சுமதி, மாயகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.