உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கம்பன் கழக செயற்குழு கூட்டம்

கம்பன் கழக செயற்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட கம்பன் கழக செயற்குழு கூட்டம் நடந்தது.கம்பன் கழக நிறுவனர் சுலைமான் தலைமை தாங்கினார். துணை தலைவர் கோமுகி மணியன். இணைச் செயலாளர் சண்முகம், பொருளாளர் அம்பேத்கர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.கம்பன் கழக வளர்ச்சிக்கு புதுச்சேரி கலால் துறை இணை ஆணையர் சண்முகசுந்தரம், திருவண்ணாமலை தமிழ் சங்கத் தலைவர் இந்திரராசன் நிதி வழங்கினர். கல்லை தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி, கம்பன் கழக தணிக்கையாளர் அண்ணாதுரை ஆகியோர் கழக வளர்ச்சி குறித்து விளக்கினர்.கூட்டத்தில், ஆர்.கே.எஸ்.,கலை அறிவியல் கல்லுாரியில் கம்பராமாயணம் குறித்து போட்டி நடத்தி பரிசு, சான்றிதழ் வழங்குவது. மாவட்ட அளவில் பொது தேர்வுகளில் தமிழ் பாடத்தில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்குவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை