உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு; ஜூலை 10ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு; ஜூலை 10ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

கள்ளக்குறிச்சி, : கனியாமூர் பள்ளி மாணவியின் வழக்கு விசாரணை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கு, கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மாணவியின் தாய் செல்வி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் மோகன், தங்களுக்கு பள்ளியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகள், முதல் தகவல் அறிக்கை, டைரி உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை கோரினார். அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் தேவச்சந்திரன் கால அவகாசம் கோரினார். அதனையேற்ற நீதிபதி ஸ்ரீராம், வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ