உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

ரிஷிவந்தியம் : மேலப்பழங்கூர் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி விளக்கு பூஜை நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த மேலப்பழங்கூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த ஜூலை 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தேவர்கள் பிறப்பு, அங்காளம்மன் பிறப்பு, பிரம்மா-விஷ்ணு சண்டை பாரதம், சுவாமி வீதியுலா, எமனுக்கு முத்து போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த ஊரணி பொங்கல் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பொங் கல் வைத்து படையலிட்டனர். தொடர்ந்து, நடந்த விளக்கு பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர். நாளை காத்தவாராயன் ஆரியமாலா சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ