உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நிலத் தகராறு: 2 பேர் கைது 

நிலத் தகராறு: 2 பேர் கைது 

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே நிலத் தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்துார் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 39; உலகங்காத்தான் திம்மையா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 37; இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 2ம் தேதி ஜெயபிரகாஷ் நிலத்தை டிராக்டர் மூலம் உழவு செய்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார், இரு தரப்பிலும் 15 பேர் மீது வழக்குப் பதிந்து, சண்முகம், ஜெயபிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ