உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நில அளவை அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம்

நில அளவை அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம்

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிய மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேவராஜன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் செந்தில்முருகன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் இந்திரகுமார் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்.கோட்ட தலைவர் ராஜா, செயலாளர் நடராஜ், மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன், திருக்கோவிலுார் கோட்ட தலைவர் முகமது ஷரீப் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாநில தலைவர் ராஜா, பொதுச் செயலாளர் குபேரன் சிறப்புரையாற்றினர். வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், பொது சுகாதார துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் இணைய வழி பட்டா மாறுதல் பணியை முழுமைப்படுத்த வேண்டும். நவீன நில அளவை கருவி ஒவ்வொரு நில அளவருக்கும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட இணைச் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி