உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த காட்டனந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.இக்கோவிலில், தேர் திருவிழா கடந்த மே 29ம் தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மன், கன்னிமார் சுவாமிகள் பிறப்பு நிகழ்ச்சி, ஊரணி பொங்கல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் காலை மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், உற்சவர் மாரியம்மன் தேரில் எழுந்தருளியதும், திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழாக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை