உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தீ விபத்தில் நுாற்றுக்கு மேற்பட்ட புறாக்கள் தீயில் கருகி பலி

தீ விபத்தில் நுாற்றுக்கு மேற்பட்ட புறாக்கள் தீயில் கருகி பலி

உளுந்தூர்பேட்டை மே 5உளுந்தூர்பேட்டையில் புறா கூண்டு தீப்பிடித்து எரிந்ததில் நுாற்றுக்கு மேற்பட்ட புறாக்கள் தீயில் கருகி இறந்தனஉளுந்தூர்பேட்டை நகராட்சி ஊ. கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவர் வீட்டில் புறாக்களை வளர்த்து வருகிறார். நேற்று மாலை இவரது வீடு அருகே இருந்த குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அப்போது அருகே இருந்த புறாக்கூண்டில் தீப்பற்றியது. இதானல் கூண்டில் இருந்த நுாற்றுக்கு மேற்பட்ட புறாக்கள் தீயில் கருகி இறந்தன. இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ