உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீடு தீ வைத்து எரிப்பு மகன் மீது தாய் புகார்

வீடு தீ வைத்து எரிப்பு மகன் மீது தாய் புகார்

உளுந்தூர்பேட்டை: திருநாவலூர் அருகே கூரை வீட்டை தீ வைத்ததாக மகன் மீது தாய் போலீசில் புகார் செய்தார். உளுந்தூர்பேட்டை தாலுகா நன்னாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி அனுஷியா, 38; இருவரும் சென்னையில் கட்டுமான கூலி வேலை செய்து வருகின்றனர். அனுஷியா தனது தாய் நல்லியம்மை, 70; க்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இதற்கு அனுஷியாவின் சகோதரர் கலியமூர்த்தி, அவரை வீட்டை காலி செய்யுமாறு கூறி அடிக்கடி பிரச்னையில் ஈடுபட்டு வந்தார்.அனுஷியாவும், அவரது கணவரும் சென்னைக்கு வேலைக்கு சென்று இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அனுஷியாவின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. அனுஷியாவின் பக்கத்து வீட்டில் இருந்த நல்லியம்மை, உடன் ஓடி வந்து தீயணைக்க முயன்றபோது அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அனுஷியாவின் தாய் நல்லியம்மை, தனது மகன் கலியமூர்த்தி தான் வீட்டை தீ வைத்து கொளுத்தியிருக்க வேண்டும் என புகார் அளித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை