உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

கள்ளக்குறிச்சி: குழந்தையுடன் காணாமல் போன தாயை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர் மகள் கவுசல்யா, 30; இவருக்கும், பெருமங்கலம் கருப்பன் மகன் பச்சமுத்து என்பவருக்கும் கடந்த 10 ஆண்டிற்கு முன் திருமணம் நடந்த நிலையில், 2 வயதில் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் பச்சமுத்துவை பிரிந்த கவுசல்யா கடந்த ஓராண்டாக தாய் வீட்டில் வசிக்கிறார்.கடந்த 16ம் தேதி டெய்லர் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு குழந்தை யுடன் சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஜெய்சங்கர் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை