உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எம்.எஸ்., குழும நிறுவனர் நினைவு தினம்

எம்.எஸ்., குழும நிறுவனர் நினைவு தினம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் எம்.எஸ். குழும நிறுவனர் சர்தார்மல் சவுகார்ன் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு எம்.எஸ்., குழும நிர்வாகி கோதம்சந்த் தலைமை தாங்கினார். விஜயராஜ் வரவேற்றார். நகர மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் குணா ஆகியோர், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கி துவக்கி வைத்தனர்.தொடர்ந்து நடந்த சமபந்தி விருந்தை தொழிலதிபர்கள் கார்த்திகேயன், முரளி துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் இந்திய கம்யூ., சரவணன், அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு, நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கோவிந்து, ரோட்டரி சாசன தலைவர் வாசன், ரோட்டரி தலைவர் செந்தில்குமார், வழக்கறிஞர் ரஜினிகாந்த், தொழிலதிபர்கள் மகாவீர், அண்ணாதுரை, தியாகு, லோகு, எல்.ஐ.சி., முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.அருண், அபிஷேக், அரவிந்த், ஆகாஷ் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ