மேலும் செய்திகள்
கரும்பு தோட்டத்தில் தீ; 2 ஏக்கர் எரிந்து சேதம்
10-Oct-2025
பா.ம.க., தலைவர் பிறந்த நாள் விழா
09-Oct-2025
மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு
09-Oct-2025
கள்ளக்குறிச்சி: நாகலுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை பணி விடுவிப்பு செய்து சி.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் இல்லாமல் வெளிபகுதியில் சுற்றி திரிவதாக சி.இ.ஓ., முருகனுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சி.இ.ஓ., முருகன் நாகலுார் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அதில், பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேன் உட்பட 16 ஆசிரியர்கள் விடுப்பில் இருந்தது தெரிந்தது. விசாரணையில், இப்பள்ளியில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பெரியசாமி, பொன்முடி ஆகியோர் பணிமாறுதல் பெற்ற நிலையில், புதிய பள்ளியில் பொறுப்பேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில், பங்கேற்க நாகலுார் பள்ளி ஆசிரியர்கள் சென்றது தெரிந்தது.உயர் அலுவலருக்கு தகவல் தெரிவிக்காமல் ஒரே நேரத்தில் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்ததால், மாணவர்களின் கல்வி பாதிப்படைகிறது.இதையடுத்து தலைமை ஆசிரியர் வெங்கடேசனை பணி விடுவிப்பு செய்து சி.இ.ஓ., முருகன் உத்தரவிட்டார்.
10-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025