உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

கள்ளக்குறிச்சி : நயினார்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்தார்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த அடரியைச் சேர்ந்தவர் அமாவாசை மகன் சிவபெருமாள், 29; இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்து சென்றார். நள்ளிரவு 12:45 மணியளவில் நயினார்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சிவபெருமாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த சிவபெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ